உலகம்

மக்களை மடையர்கள் என எண்ணாதீர்!- டாயிம்

கோலாலம்பூர், மார்ச் 31 – மக்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என எண்ணி மக்களை மடையர்களைப் போல நடத்த வேண்டாமென துன் டாயிம் ஸைனுடின் வலயுறுத்தினார்.

அதே போன்று துன் மகாதீருக்குப் பின் யார் வருவார்கள் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்பதால் அதன் மீது கேள்வி எழுப்பத் தேவையில்லை என்று அவர் சொன்னார்.

உலக விஷயங்களை நன்கு தெரிந்து வைத்திருக்கும் மக்கள், அரசின் பிரச்னைகளை எடுத்துச் சொன்னால் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்கள்.

அனுபவமில்லாத அமைச்சர்களிடையே ஒருமித்த கருத்து வேண்டும். குறைகூறல்களை நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் பக்காத்தான் உறுப்புக் கட்சிகளுக்கு சம உரிமை வழங்கப் பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அம்னோவும் பாஸ் கட்சியும் ஒத்துழைப்பது அரசியலில் வழக்கமானது. பல்லின மக்கள் வாழும் நாட்டில் அரசியலில் இன வேற்றுமை தலை தூக்குவது ஆரோக்கியமானது அல்ல. அதனை தவிர்ப்பதே நல்லது என பேட்டி ஒன்றில் அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker