Latestஉலகம்

60 நாள் படுத்துக் கிடந்தால் ஒரு லட்சம் டாலர் சம்பளம்! -நாசா அறிவிப்பு

பெர்லின், மார்ச்.31 விண்வெளியில் செயற்கை புவியூர்ப்பு விசை, விண்வெளி வீரர்களுக்கு எந்த அளவுக்கு உதவும் என்பதை அறிந்து கொள்ள நாசா புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

அதாவது 60 நாட்கள் எதுவும் செய்யாமல் படுக்கையிலேயே இருக்கவேண்டும். 24 முதல் 55 வயது உள்ள 12 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் அந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப் படவுள்ளனர். நாசா இதற்காக  ஒரு லட்சம் அமெரிக்கா டாலர்களை சம்பளமாக வழங்க உள்ளது.

தூங்குவது மட்டுமல்லாமல் உணவு, ஓய்வு, குளியல், ஆராய்ச்சிகள் என அனைத்துமே படுக்கையில் இருந்தவாறே மேற்கொள்ளவேண்டும்.

பங்கேற்பாளர்களின் பாதி பேரின் தசை பலம், உடல் சமநிலை, இதய செயல்பாடு ஆகிய அனைத்தும் கண்காணிக்கப்படும். ஏனையவர்கள் எந்த
விதமான புவியீர்ப்பு விசையும் இல்லாத இடத்தில் வைக்கப்பட்டு சோதனை செய்யப்படுவர்.

இறுதியில் இந்த இரண்டு குழுவிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை வைத்து செயற்கை புவியீர்ப்பு விசை எந்த அளவுக்கு உபயோகமாக உள்ளது என்பதை உறுதி செய்வர்.

விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாத காரணத்தால் எடையிழப்பது போன்று தோன்றக்கூடிய உணர்வு எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

இதற்காக பூமியில் இருப்பது போன்று ஈர்ப்பு விசையை செயற்கையாக உருவாக்குவது நிச்சயமாக உபயோகமாக இருக்கும் என நாசாவின் தலைமை மனித ஆராய்ச்சி திட்டத்தின் உதவித் தலைமை அதிகாரியாகப் பணிபுரிந்து வரும் லெசிசியா வெகா தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் நீண்ட காலம் இருக்கும் விண்வெளி வீர்ர்கள் உடல்ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சனைகள், மனஅழுத்தம், தனிமை உணர்வு மற்றும் காஸ்மிக் கதிர்வீச்சு போன்றவற்றை குறைப்பதற்காக அந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப் படவுள்ளது. நாசா மேற்கொள்ளவுள்ள இந்த ஆராய்ச்சி ஜெர்மன் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker