Latestஉலகம்

இரட்டை அடுக்கு பேருந்தில் தீ! 20 பயணிகள் கருகிய துயரம்!

லிமா,ஏப்.1- பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் இருந்து புறப்பட்டு சென்ற இரட்டை அடுக்கு பேருந்தில் தீப்பிடித்த விபத்தில் 20 பயணிகள் உயிரிழந்தனர்.

லிமாவிலிருந்து சுமார் 100 பயணிகளுடன் சிக்லாயோ என்ற நகரை நோக்கி இந்த இரட்டை அடுக்கு பேருந்து புறப்பட்டு சென்றது. வழியில் சான் மார்ட்டின் டி போர்ரெஸ் என்ற இடத்திலுள்ள உள்ள நிறுத்தம் ஒன்றில் நின்றிருந்த அந்தப் பேருந்தின் இயந்திரப் பகுதி திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

சில விநாடிக்குள் பேருந்தின் இருக்கையின் வழியாக மளமளவென்று பரவிய தீயில் பயணிகள் சிக்கிக் கொண்டனர்.

குறிப்பாக, மேல் அடுக்கு மாடியில் இருந்த பயணிகள் கீழே இறங்க வர முடியாமல் தவித்தனர். இதற்குள் பயங்கர சப்தத்துடன் பேருந்தில் ஒரு பகுதி வெடித்துச் சிதறியது. இந்தக் கோர விபத்தில் 20 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். காயங்களுடன் பலர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker