Latestமலேசியா

சிங்கப்பூருக்கு 3ஆவது போக்குவரத்துத் தொடர்பு சாத்தியமானதே! – ரேமன் நவரத்தினம்

கோலாலம்பூர், ஏப். 1 – போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சிங்கப்பூருக்கு மூன்றாவது பாலம் அல்லது ரயில் திட்டம் சாத்தியமானதே என சமூக ஆர்வலர் டான்ஶ்ரீ ரேமன் நவரத்தினம் குறிப்பிட்டுள்ளார்.

அது பாலமாக இருக்காமல் கடலடி சுரங்கப்பாதை அல்லது ரயிலாகவும் இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

3ஆவது பாலம் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அமைச்சுகளோடு ஆலோசனை நடத்தப் போவதாக ஜொகூர் மந்திரி பெசார் ஓஸ்மான் சாப்பியான் அறிவித்திருந்தார்.

முந்தைய அரசின் திட்டமான கோலாலம்பூர்- சிங்கப்பூரை இணைக்கும் அதிவேக ரயில் திட்டத்தைப் பக்காத்தான் அரசு ரத்து செய்ததையும், அதன் பயண நேரம் 30 நிமிடங்களே என்பதையும் ரேமன் நினைவுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker