Latestவாழ்க்கை

லங்காவியில் கோரத் தீ! ஒரே குடும்பத்தில் மூவர் மரணம்!

லங்காவி, ஏப்.1 – லங்காவியில் வீடொன்றில் ஏற்பட்ட தீயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக மரணமடைந்தனர்.

புக்கிட் மாலுட், நெலாயான் உணவகத்திற்கு முன்புறம் இருந்த வீட்டில் இன்று காலை 7 மணியளவில் மூண்ட தீயில் ஓர் ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் பலியானதாகத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மையத்தின் கெடா மாநிலத் தலைவர் துவான் ஸமானி இஸ்மாயில் தெரிவித்தார்.

முகமட் நாஹார் சுகைமி(வயது 39), அவரின் துணைவியார் நர்சுஹைலா அகமட்(வயது 41) மற்றும் அவர்களது மகன் முகமட் நவ்ஃபாட்(வயது 6) ஆகியோரே மரணமடைந்தவராவர்.

முகமட் நாஹார் வரவேற்பு அறையில் கருகிய நிலையிலும், அவரின் மனைவியும் மகனும் குளியறையிலும் மூச்சுத் திணறலினால் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். தீ ஏற்பட்டதற்கான காரணம் புலனாய்வு செய்யப்படுவதாக துவான் ஸமானி தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker