Latestமலேசியா

ஆசிய நாடுகளில் மலேசிய முன்னிலை பெற வேண்டும் – அன்வார்

ஷா ஆலம், ஏப். 2 – ஆசியாவின் புலி எனும் உயர்ந்த நிலையை மலேசியா அடைய நம்பிக்கை, நேர்மறையான எண்ணம், செயல்பாட்டுத் திறன் ஆகியவை முக்கியம் என டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தொழிற்புரட்சி தானாக வராது என்றும் தலைவர்களுக்குத் திடமான மன உறுதி இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மலேசியா உயர்ந்த நிலையை அடைய ஒழுங்குக் கட்டுப்பாடு, மதிப்புக் கூறுகள், நன்னடத்தை, உறுதி, நம்பிக்கை மற்றும் அதனை செயல்படுத்தும் உறுதிப்பாடும் வேண்டும்.

ஊழலை ஒழிப்பதன் மூலம் மக்கள் வளம் பெற முடியும் என பக்காத்தான் நம்புவதாகவும் அது வெற்றியடைய மக்கள் பூரண ஒத்துழைப்பைத் தர வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

ஷா ஆலம், மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உருமாற்றுத் திட்ட கருத்தரங்கில் உரையாற்றும்போது, அன்வார் அவ்வாறு குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker