Latestமலேசியா

செமிஞ்சே இடைத்தேர்தலை மீண்டும் நடத்தக் கோரி வழக்கு!

கோலாலம்பூர், ஏப். 2 – நடந்து முடிந்த செமிஞ்செ இடைத்தேர்தலின் முடிவை ரத்து செய்து புதிய தேர்தலை நடத்த வேண்டுமென சபாரியா முகமட் ஷாரிஃப் (வயது 58) என்பவர் வழக்கைத் தொடுத்துள்ளார்.

மார்ச் 2-இல் நடைபெற்ற அந்த இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்தின் தலைவர் அஷார் ஹருண் ஒருவர் மட்டுமே உறுப்பினராக இருந்து அதனை நடத்தலாம் என அறிவித்தது சட்டத்துக்கு முரணானது என அறிவித்து புதிய தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டுமென அவர் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அச்சமயத்தில் ஆணையத்தின் உறுப்பினர்களாக இருந்த ஓஸ்மான் மஹ்மூட், மாட் யூசோப் மன்சோர், அப்துல் அஸிஸ் காலிடின், சுலைமான் நராவி, கே.பாலசிங்கம் மற்றும் லியோ சோங் சியோங் ஆகியோர் பதவி விலகியிருந்தனர்.

இதற்கு முன்னர், பிப்ரவரி 26-இல் ஷா ஆலம் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். கோமதி அந்த வழக்கைத் தள்ளுபடி செய்திருந்தார்.

செமிஞ்சே இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் ஸக்காரியா ஹனாஃபி 19,780 வாக்குகளும் பக்காத்தானின் முகமட் ஐமான் ஸைனாலி 17,866 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker