Latestமலேசியா

ரிம. 28,000 கைக்கடிகாரம் லஞ்சமா? அமைச்சரின் செயலாளர் கைது!

கோலாலம்பூர், ஏப். 2- சுமார் 28 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய ஆடம்பரக் கைக்கடிகாரம் ஒன்றை லஞ்சமாகப் பெற்றதாக தம்முடைய அரசியல் செயலாளர் கைது செய்யப்பட்டிருக்கும் விஷயத்தில் தாம் தலையிடப் போவதில்லை என்று விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் துறைகளுக்கான அமைச்சர் டத்தோ சலாஹுடின் அயூப் தெரிவித்தார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசியின் அதிகாரிகளால் தன்னுடைய அரசியல் செயலாளர் கைதாகி இருப்பதை உறுதிப்படுத்திய அமைச்சர், இதர மலேசியர்களைப் போலவே இவரும் சட்டத்திற்கு உட்பட்டவர் தான் என்று சுட்டிக்காட்டினார்.

எம்ஏசிசியின் நடவடிக்கையில் தாம் தலையிடப் போவதில்லை சட்டம் தன் பணியைச் செய்யட்டும். சட்டக் கோட்பாடுகளின் மீதான தமது நம்பிக்கையில் தாம் உறுதிப்பாடுடன் இருப்பதாக அவர் சொன்னார்.

மேம்பாட்டாளர் ஒருவரிடமிருந்து விலைமதிப்புள்ள கடிகாரத்தை லஞ்சமாகப் பெற்றதாக அமைச்சரின் செயலாளரான 47 வயதுடைய அந்த நபரை, புத்ரா ஜெயாவிலுள்ள எம்ஏசிசியின் தலைமையகத்தில் தாங்கள் கைது செய்ததாகவும் இது தொடர்பான விசாரணைக்கு அழைக்கப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் ஆணையத்தின் தலைவர் டத்தோஶ்ரீ அஷாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker