Latestசினிமா

எந்த நடிகரும் செய்யாததை சாதித்துள்ள ராகவா லாரன்ஸ்!

சென்னை, ஏப். 3- நடிகர்களில் ஒரு தனி திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குனராக பணியாற்றி, நடிகராகி இப்போது அவரே கதை எழுதி இயக்கி நடித்து வருகிறார். அவரின் காஞ்சனா, முனி படங்கள் தமிழ் சினிமாவில் புது பாணியை உருவாக்கின.

இதனை தொடர்ந்து அவர் காஞ்சனா 3 பாகத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 19-இல் வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை எளிமையாக நடத்துமாறும் பிரம்மாண்ட செலவு வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அதற்கு ஆகும் செலவு பணத்தை ஆதரவற்ற திருநங்கைகளுக்கு கொடுத்து உதவ வேண்டும் எனத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற இசை வெளியிட்டு விழாவில், குடும்பத்தினரால் கைவிடப்பட்ட திருநங்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் வீடு கட்டித் தரும் முயற்சிக்கு மக்களும் உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்காக அவர் சென்னை மீஞ்சூரில் 1.25 கிரவுண்ட் நிலத்தை வாங்கி உள்ளார். அவரின் இந்த முயற்சியை பலரும் வாழ்த்தியுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker