Latestமலேசியா

ஞானராஜாவின் டத்தோ ஶ்ரீ விருது பறிப்பு- மறுத்தார் ஞானராஜா ! 

குவாந்தான், ஏப். 3 – தொழிலதிபர் ஜி.ஞானராஜாவுக்கு பகாங் சுல்தான் வழங்கிய டத்தோ ஶ்ரீ விருது பறிக்கப்பட்டதாக மாநிலச் செயலாளர் உறுதிப்படுத்தினார்

2014ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி பகாங் சுல்தான் ஞானராஜாவுக்கு வழங்கிய அந்த விருதை ரத்து செய்வதாக பகாங் மாநிலச் செயலாளர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சாலேஹுடின் இஷாக் மார்ச் 13ஆம் தேதியிட்ட கடிதம் வாயிலாகத் தெரிவித்திருந்தார். அது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

அந்த டத்தோ ஶ்ரீ விருதை ஞானராஜா இனிமேல் பயன்படுத்தக்கூடாதெனவும் அதனை மாநில செயலகத்துக்குத் திருப்பித்தர வேண்டுமெனவும் பணிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பிரிவில் விசாரித்தபோது  அவர் அதனை இன்னும் திருப்பிதரவில்லை என தெரிகிறது.

இதற்கிடையில் ஞானராஜா தமக்கு வழங்கப்பட்ட விருது பறிக்கப்படவில்லை என்றும் அச்செய்தி ஒரு வதந்தி என ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கூறியுள்ளதாக மலேசியா கினி  புதன்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker