Latestமலேசியா

பாதிரியார் கோ மறைவு – ஐஜிபி மீது நடவடிக்கை வேண்டும்

கோலாலம்பூர், ஏப். 3 – பாதிரியார் ரேய்மன்ட் கோ காணாமல் போனதற்கு உடந்தையாக இருந்த முன்னாள் போலீஸ் தலைவர் டான் ஶ்ரீ  காலிட் அபு பாக்கர் மீது நடவடிக்க எடுக்க வேண்டுமென கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ வலியுறுத்தினார்.

ரேய்மன்ட் கோவும் சமூக ஆர்வலர் அம்ரி சே மாட்டும் கடத்தப்பட்டு காணாமல் போனதற்கு புக்கிட் அமான் சிறப்புப் பிரிவு ஒரு காரணம் என  சுஹாகாம் அறிவித்துள்ளதால் மேற்கண்ட நடவடிக்கை அவசியம் என அவர் அறிவுறுத்தினார்.

இந்த விவகாரத்தை மறைத்த டான் ஶ்ரீ ஃபுஸி ஹருண் மற்றும் அவரின் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சார்லஸ் கேட்டுக் கொண்டார்.

மேலும் ஃபுஸி, ரேய்மன்ட் கோ, அம்ரி, பாதிரியார் ஜோசுவா ஹில்மி அவரது துணைவியார் ரூத் சிதெப்பு  இன்னும் காணாமல் போன இரண்டு சமூக ஆர்வலர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை ஃபுஸி ஹருண் தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker