Latestமலேசியா

போர்ட்டிக்சனில் சுற்றுலா திட்டம்- ரந்தாவுக்கும் பயனளிக்கும்

சிரம்பான், ஏப். 3 – போர்ட்டிக்சனில் மேற்கொள்ளப்படும் சுற்றுலாத்துறை திட்டங்கள் மற்ற மாவட்டங்களுக்கும் பயனளிக்கும் என டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பல வெளிநாட்டு நிறுவனங்கள் போர்ட்டிக்சனில் சுற்றுலாத் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவதாகவும் அரசின் ஒப்புதலோடு அவை செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

போர்ட்டிக்சனில் தம்மை இந்தியர்கள் ஆதரித்த காரணத்தினால்தான் டாக்டர் ஶ்ரீ ராமை ரந்தாவ் இடைத்தேர்தலின் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்ததாக நேற்று கோல சாவா எனுமிடத்தில் தேர்தல் பரப்புரையின்போது அன்வார் குறிப்பிட்டார்.

பக்காத்தான் ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் பொதுமக்களின் பணத்தைக் களவாடும் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாகவும் பல நாடுகளில் 1எம்டிபி நிதி மோசடி குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கும் வேளையில்,  சமயத் தலைவர்கள் அது சம்பந்தமாக மெளனம் சாதிப்பது தமக்கு வியப்பை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker