Latestஇந்தியா

சீட்டு கிடைக்காத கோபத்தில் பிரசாரத்தை ஓரங்கட்டிய குஷ்பு!

சென்னை, ஏப். 4- படப்பிடிப்பில் தீவிரமாக இருப்பதை காரணம் காட்டி தேர்தல் பிரசாரத்தை நடிகை குஷ்பு தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் நடிகை குஷ்பு சேர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகிறது. அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொகுப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

குஷ்பு 2016 சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பினார். சீட் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தார். தற்போதைய  தேர்தலில் திருச்சி  தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார். ஆனால், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருக்கு அத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தலைமை மீது குஷ்பு அதிருப்தியில் உள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் பிரச்சாரம் செய்யவுள்ள காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் குஷ்பு பெயரை 29 ஆவது இடத்தில் சேர்த்துள்ளனர்.

சமீபத்தில் சேர்ந்த திருநங்கை அப்சராவிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். சில நாட்களுக்கு முன் கட்சியில் சேர்ந்த நடிகை ஊர்மிளாவுக்கு மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது போன்ற காரணங்களால் காங்கிரஸ் மேலிடம் மீது கோபத்தில் உள்ளார். தன் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் தேர்தல் பிரசாரத்தை அவர் தவிர்க்க துவக்கியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் சிலர் அவரை பிரசாரத்திற்கு அழைத்துள்ளனர். படப்பிடிப்பில் பிசியாக இருப்பதாக கூறி அவர்களது அழைப்பை குஷ்பு தட்டிக் கழித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரசாரம் செய்யாத பட்சத்தில் அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை பாயவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker