Latestமலேசியா

போலீஸ் துஷ்பிரயோகத்தை தடுக்க ஐபிசிஎம்சியை அமைப்பீர் – ஜி25 கோரிக்கை

புத்ரா ஜெயா, ஏப். 4 – போலீஸ் துறையின் அத்துமீறல்களைத் தடுக்க போலீஸ் புகார் மற்றும் துர்நடத்தை தொடர்பான ஆணையத்தை (ஐபிசிஎம்சி) விரைவாக அமைக்க வேண்டுமென ஜி25 எனும் முன்னாள் உயர்மட்ட மலாய் அரசு அதிகாரிகளின் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பாதிரியார் ரேய்மன்ட் கோவும் சமூக ஆர்வலர் அம்ரி சே மாட்டும் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டதற்கு புக்கிட் அமான் போலீஸ் சிறப்புக் குழுவும் காரணம் என நேற்று, மனித உரிமை ஆணையம் சுஹாகாம் அறிவித்ததைத் தொடர்ந்து ஜி25யும் பேட்ரியோட் அமைப்பும் அது பற்றி அறைகூவல் விடுத்துள்ளன.

எனவே, தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டதைப் போன்று,  ஐபிசிஎம்சியை அரசு விரைவில் அமைக்க வேண்டும்.  போலீசாரின் அத்துமீறல்களைக் கண்காணித்து உடனடி நடவடிக்கையை அது எடுக்க முடியும் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

போலீசாரின் தன்னலமற்ற சேவையை மதிக்கும் அதே  வேளையில்,  அவர்கள் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களின் நம்பிக்கையை இழந்து வருவது கவலை அளிப்பதாக மேற்கண்ட இரு அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker