Latestமலேசியா

முந்திச் செல்ல முயன்ற போது வாகன விபத்தில் மூவர் மரணம்

கோத்தா கினபாலு, ஏப். 4 – சபா, லாஹாட் டத்து-சண்டாக்கான் சாலையில் வாகனம் ஒன்று மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்று ஏற்பட்ட சாலை விபத்தில் மூவர் மரணமடைந்தனர்.

சண்டாக்கானிலிருந்து  லாஹாட் டத்துவுக்கு  வந்து கொண்டிருந்த வாகனத்தில் பயணித்த  சோங் சு ஃபா(வயது 39), சோங் சூ ஃபே (வயது 46) மற்றும் சோங் யீ ஃபாய் (வயது 15) ஆகியோர் அந்த விபத்தில் மரணமடைந்தனர்.

மற்ற வாகனத்தில் இருந்த 35 வயது மாதுவும் அவரது 2 வயது மகனும் காயமடைந்ததாக லாஹாட் டத்து துணை ஆணையர் நாசிர் மன்சோர் தெரிவித்தார்.

அந்த விபத்து மேட்டுப்பாங்கான, வளைவுகள் மிகுந்த சாலையில் காலை 6.15 மணிக்கு நிகழ்ந்ததாகவும் ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் முந்திச் செல்ல முயன்றபோது,  இந்த விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

1987ஆம் ஆண்டு ஆபயகரமாக வாகனத்தை ஓட்டுதல்  சட்டத்தின் வழி இந்த வழக்கு விசாரிக்கப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker