Latestஉலகம்

வெளியே தேனிலவு: வீட்டுக்குளே கஞ்சா! புதுமணத் தம்பதியருக்கு சிறை!

லண்டன், ஏப்.4- கரீபியன் தீவில் தங்களுடைய கனவு திருமணத்தை முடித்து விட்டு வீடு திரும்பியதும் கைது செய்யப்பட்ட பிரிட்டன் தம்பதியினர் வழக்கில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

பிரிட்டனை சேர்ந்த மணமகள் லீகா ஆம்ஸ்ட்ராங் (வயது 25)  மற்றும் மணமகன் ரிக்கி (வயது 29) ஆகியோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தங்களுடைய கனவு திருமணத்தை நிறைவேற்றுவதற்காக 4,000 மைல்கள் தொலைவில் உள்ள கியூபாவிற்கு சென்றுள்ளனர்.

அங்கு தங்களுடைய திருமணம் மற்றும் தேனிலவை முடித்து விட்டு, வீடு திரும்பியதும் அத்தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுடைய சொந்த வீட்டிலிருந்து வித்தியாசமான ஒரு வாடை வருவதை உணர்ந்த பக்கத்து வீட்டார், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற போது ஒரு கஞ்சா தொழிற்சாலையே அங்கு நஇருந்ததை பார்த்து அதிர்ந்துள்ளனர்.

அங்கு வளர்க்கப்பட்ட 34 வகை கஞ்சா தாவரங்களையும் மற்றும் வெப்பமூட்டியையும் கைப்பற்றி போலீசார் ‘சீல்’ வைத்தனர். மேலும் அந்த இடத்தில் கஞ்சாவை பராமரிக்கும் முறை பற்றிய குறிப்புகளை  மணமகன் ரிக்கி முழு விவரமாக எழுதி வைத்திருந்த குறிப்பினையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் நடந்த பொழுது அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் அவர்களுடைய வீட்டில் காப்பற்றிய 22,500 பவுண்டு மதிப்பிலான கஞ்சா 30 முதல் 90 அவுன்ஸ் எடை கொண்டவை எனக் கூறினார்.

வழக்கின் முடிவில் மணமகன் ரிக்கிக்கு 8 மாத சிறைத்தண்டனையும்- சம்பளமில்லாமல் 150 மணி நேரம் வேலை செய்யவும் நீதிபதி கட்டளையிட்டார். அதேபோல் லீகாவுக்கு 9 மாத சிறைத்தண்டனையும் சம்பளமில்லாமல் 120 மணி நேரம் வேலை செய்யவும் உத்தரவிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker