Latestஉலகம்

அமெரிக்கா துணையதிபர் ஜோ பிடென் மீது 3 பெண்கள் பாலியல் புகார்

வாஷிங்டன், ஏப். 5- அமெரிக்கா முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் மீது மேலும் 3 பெண்கள் பாலியல் புகார் எழுப்பி இருப்பது அமெரிக்காவை அதிர வைத்துள்ளது. அமெரிக்காவில் ஒபாமா அதிபராக இருந்த போது 2009 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை துணை அதிபராக பதவி வகித்தவர் ஜோ பிடென்.

இவர் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்குவதற்கு பரிசீலித்து வருகிறார். இந்நிலையில் பெண்கள் சிலர் ஜோ பிடென் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர்.

நெவெடா மாகாண சட்டசபையின் முன்னாள் உறுப்பினரான லூசி புளோரஸ் (வயது 39) ஜோ பிடெனின்  முன்னாள் உதவியாளரான எமி லோப்போஸ் (வயது 43) உள்பட 4  பெண்கள் ஜோ பிடென் அனுமதியின்றி  தங்களை தொட்டதாகவும் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தாகவும் குற்றம் சுமத்தி இருந்தனர்.

இந்நிலையில் வெள்ளை மாளிகையின் முன்னாள் ஊழியரான வைல் கோனெட் ஜனநாயக கட்சியின் முன்னார் உறுப்பினர் யாலி கோல் மற்றும் சோபி காரசிக் ஆகிய 3 பெண்கள் ஜோ பிடென் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.
முன்னாள் துணை அதிபர் மீது அடுத்தடுத்து 7 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி இருப்பது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker