Latestமலேசியா

பரப்புரைகளில் பிள்ளைகளைப் பயன்படுத்தினோமா? – ஶ்ரீராம்

சிரம்பான், ஏப். 5 – பக்காத்தான் தேர்தல் பரப்புரைகளில் பிள்ளைகளைக் கருவிகளாகப் பயன்படுத்தவில்லை என டாக்டர் ஶ்ரீராம் சின்னசாமி விளக்கமளித்துள்ளார்.

அன்றைய தினம் அரசு சாரா இயக்கம் ஒன்று சித்திரப் போட்டியை நடத்தி பக்காத்தான் ஏற்பாடு செய்திருந்த தற்காலிக லோரியில் அமைக்கப்பட்ட மேடையை பரிசு வழங்க பயன்படுத்தியதாக ஶ்ரீராம் தெரிவித்தார்.

அந்த என்ஜிஓ தனக்கென மேடை இல்லாத நிலையில், பக்காத்தான் பரப்புரைக்காக  அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடையைப் பயன்படுத்தியதாகவும், பக்காத்தான் அந்தப் பிள்ளைகளை வைத்து எந்த நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்யவில்லை எனவும் குறிப்பிட்டார்.

அந்த நிகழ்ச்சியில் பிள்ளைகள் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத் தளத்தில் வைரலாகிப் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அம்னோ தலைவர்கள் முகமட் ஹசான், கைரி ஜமாலுடின், நஜிப் ரசாக் ஆகியோர் அச்செயலைக் கண்டித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker