Latestஇந்தியா

முன்பு எம்.ஜி.ஆர் பிரசாரத்தில் நெருப்பு பறந்தது: இப்போது செருப்பு பறக்கிறது

மதுரை, ஏப்.5- அந்தக் காலத்தில் எம்ஜிஆர் பிரச்சாரம் செய்த போது நெருப்பு பறக்கும். இப்போது செருப்பு பறக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

மதுரை மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் அழகரை ஆதரித்து இன்று அக்கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரை பழங்காந்தம் வடக்கு மாசி வீதி உள்ளிட்ட  பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது மக்களிடம் கமல் பேசியதாவது:- முன்பு எம்ஜிஆர், தேர்தல் பிரச்சாரத்துக்கு போனார் என்றால் நெருப்பு பறக்கும். இப்போது செருப்பு பறக்கிறது. அதற்கு காரணம் மக்கள் அல்ல. அரசியல்வாதிகள் செய்த அட்டூழியங்கள். பல அட்டூழியங்களை செய்து விட்டு இன்னமும் மக்கள்  கூலக்கும்பிடு போட்டு நிற்க வேண்டும் என நினைப்பது முற்றிலும் மடத்தனம்.

தன்னை விட பலசாலிகளை பார்த்தால் கூலக்கும்பிடு போடுவது அவர்களுடைய வேலை. மக்களுடைய வேலையாக அது இருக்கக்கூடாது. மக்கள் நீதி மய்யம் கட்சி, மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்தால் அந்த பிரச்சினையைத் தீர்கக நானே வருவேன். அவர்கள் தவறு செய்தது உறுதியானால் அவர்களின் ராஜினாமா கடிதம் மக்களாகிய உங்கள் கைகளுக்கு வரும் இவ்வாறு கமல் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker