Latestமலேசியா

சபாவில் பெர்சத்து கட்சி அறிமுகம் மகாதீர் தொடக்கி வைக்கிறார்!

கோத்தா கினபாலு, ஏப். 6 – சபா மாநிலத்தில்  பிரிபூமி பெர்சத்துவின் மாநிலக் கிளை அதிகாரப்பூர்வமாக இன்று அமைக்கப்படும்.  அக்கட்சியின் அவைத் தலைவர் துன் மகாதீர் அதனை தொடக்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிகழ்ச்சி அனைத்துலக தொழில்நுட்ப மற்றும் வர்த்தக மையத்தில்(ஐடிசிசி)  பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் என்றும்  மகாதீர் மாலை 4 மணியளவில் உரையாற்றுவார்.

அதில் மலாய்-முஸ்லிம் மக்கள் 30,000க்கும் மேற்பட்டோரோடு முஸ்லிம் அல்லாதோரும் உள்ளூர் கடாசான், சூசுன் மற்றும் மூருட் இன தலைவர்களும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்சத்து,  சபாவில் நுழைவதால் பக்காத்தானின் தோழமைக் கட்சியான வாரிசான் சபா சரிவை எதிர்நோக்கும் என சொல்லப்படுகிறது. எனினும், சபாவை ஆட்சி செய்யும் வாரிசான் சபாவுக்கு அது எதிர்க்கட்சியாகச் செயல்படக்கூடது என முதலமைச்சர் ஷாபி அப்டால் கேட்டுக் கொண்டார்.

சபாவில் செயல்படும் அம்னோவுக்குச் சவால் விடும் வகையில்தான் பெர்சத்து நுழைவதாகவும் அது உள்ளூர் அரசியலில்  குழப்பத்தையும் முதலமைச்சர் ஷாபி அப்டாலுக்கு எதிராகவும் செயல்படாது என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.

அம்னோவின் முன்னாள் தலைவர்கள் அதில் இணைந்துள்ளதால் அது அம்னோ 2.0வைப் போல் இருக்காது ஆனால்,  மத்திய மாநில அரசுகளை இணைக்கும் பாலமாகச்  செயல்படும் என ஜசெக குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன், இன, சமய அரசியலை அங்கு ஊக்குவித்த அம்னோவைப் போன்று,   அது செயல்படாது.  அது வாரிசான் சபாவோடு இணங்கியே, இணைந்தே போகும் என்ற கருத்தும் நிலவுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker