Latestஇந்தியா

மேக்கப்பிலேயே நேரத்தை கழிக்கும் தமிழச்சி தங்கபாண்டியன்! கட்சிக்குள் கலாய்ப்பு

சென்னை, ஏப்.6-மேக்கப் போடுவதற்கே அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் தமிழச்சி தங்கபாண்டியனை சொந்தக் கட்சியா திமுகவுக்குள்ளேயே கலாய்க்கத் தொடங்கிவிட்டனர்.

தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுபவர் தமிழச்சி தங்கபாண்டியன். “அழகான வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியனை வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று உதயநிதி பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது.

தற்போது தமிழச்சி தங்கபாண்டியனின் அழகுக்குக் காரணம் மேக்கப் தான் என்று உடன்பிறப்புகளே கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.

காலை 7 மணிக்கு பிரச்சாரத்தை துவங்கலாம் என்று கூறினாலும் தமிழச்சி பிரச்சாரத்திற்கு புறப்படுவதற்கே 9 மணிக்கு மேலாகிவிடுகிறது.

இதற்கு காரணம் அவரின் அலங்காரத்திற்கு மட்டும் 2 மணி நேரம் ஆகிறதாம். அது மட்டுமில்லாமல் பிரசாரத்திற்கு இடையே வேறு மேக்கப் போடுவதற்கு புறப்பட்டு சென்று விடுவதாகவும் ஒரு புகார் உள்ளது.

இதனால் பொறுமையிழந்த உடன் பிறப்புகள் ஒரு கட்டத்தில் தமிழச்சி தங்கபாண்டியனை “மேக்கப் பைத்தியம்” என்று தங்களுக்குள்ளாகவே பேச ஆரம்பித்துள்ளனர். மேக்கப் போடுவது தவறில்லை.

ஆனால் எப்போதும் மேக்கப் போடுவது எப்படி சரியாக இருக்கும் என்று திமுக நிர்வாகிகள் புலம்புகின்றனர். ஆனால் அவர்களுக்கு எல்லாம் தெரியாது அவர் மேக்கப் இல்லாமல் வெளியே வந்தால் அவரை யாருக்குமே அடையாளம் தெரியாது என்ற ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker