Latestமலேசியா

ஜொகூர் மாநிலத்தில் மந்திரி புசார் மாற்றமா?

ஜொகூர் பாரு, ஏப்ரல்.7- ஜொகூர் மாநிலத்தில் புதிய மந்திரி புசார் ஒருவர் நியமிக்கப்படுவார் என்ற தகவல் தற்போது பரவலாகி வருகிறது. பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் கொண்ட மாநிலமாக கருதப்படும் ஜொகூர் மாநிலத்தை கடந்த பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றியது முதல், மந்திரி புசாராக பொறுப்பு வகித்து வரும் ஒஸ்மான் சபியான், புதிய மந்திரி புசாருக்கு வழிவிடத் தயாராகி விட்டார் என்ற ஆரூடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

புதிய மந்திரிபுசார் பொறுப்புக்கு புக்கிட் கெப்போங் சட்டமன்ற உறுப்பினரும் பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவருமான ஷாஹாருடின் ஜமால் நியமிக்கப்படலாம் என்றும் அந்த ஆரூடங்கள் கூறுகின்றன.

கடந்த ஜனவரியில் ஜொகூர் அரண்மனையில் ஜொகூர் சுல்தான் அவர்களை நேரில் சந்தித்து பிரதமர் துன் மகாதீர் கலந்துரையாடிய போது மந்திரி புசார் மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் எனினும், அதற்கு தற்போது அவசரத்தேவை இருப்பதாகவும் கருதப்படுகிறது.

ஜொகூர் சுல்தான் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் வார இறுதியில் அவர் தாயகம் திரும்பியதும், இந்த மாற்றங்களுக்கான வழிபிறக்கும் என்று அந்த ஆரூடங்கள் கூறுகின்றன. இருப்பினும் ஜொகூர் சுல்தானின் இறுதி ஒப்புதலின் அடிப்படையிலேயே இந்த மாற்றங்கள் நிகழும் சாத்தியம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker