Latestஇந்தியா

தமிழறிஞர் ‘சிலம்பொலி’ செல்லப்பன் காலமானார்!

சென்னை, ஏப்ரல். 7- தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் முதுமையின் காரணமாக ஏற்பட்ட உடல் நலக் குறைவால் தம்முடைய 91ஆவது வயதில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் தமிழறிஞர்களும் பொதுமக்களுக்கும் தங்களது அஞ்சலியைச் செலுத்தினர்.

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சிலம்பொலி செல்லப்பன், 1929ஆம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள சிவியாம் பாளையம் என்ற கிராமத்தில் பிறந்தவர்.

சிலப்பதிகாரத்தின் சிறப்பை தமிழ் மக்களிடையே இடைவிடாமல் வாழ்நாள் முழுவதும் பரப்பி வந்த பெருமைக்குரியவர். சிலம்பொலி, சிலப்பதிகாரம் தெளிவுரை, சிலப்பதிகாரச் சிந்தனைகள் உளைட்ட பல நூல்களையும் ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.

செம்மொழிக் குழுவில் ஓர் உறுப்பினராக இருந்துள்ள இவர், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளின் ஏற்பாடுகளுக்கான பல்வேறு நிலைப் பொறுப்பாளராக இருந்து வழிநடத்தியவர். சிறந்த பேச்சாளருமான சிலம்பொலி செல்லப்பன், பல நூற்றுக்கணக்கான மேடைகளில் சொற்பொழிவாற்றி இருப்பதோடு ஆய்வரங்களிலும் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியவர்.

சென்னையிலுள்ள அவரது மகனின் இல்லத்தில் அவரது நல்லுடல், நேற்று மாலை மக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இன்று காலை அவரது சொந்தக் கிராமமான சிவியாம் பாளையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker