Latestமலேசியா

தொழிலதிபர் ஞானராஜா கைது: நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்?

புத்ராஜெயா, ஏப்ரல். 7- தொழிலதிபரான ஜி.ஞானராஜாவை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி. இன்று காலை 11.40 மணியளவில் கைது செய்தது. அவர் நாளை திங்கள் கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அவர் மீது புதிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அட்டர்னி ஜெனரல் அலுவலகம் ஞானராஜாவைக் கைது செய்ய ஒப்புதல் வழங்கியதை அடுத்து இன்று எம்.ஏ.சி.சி அலுவலகத்திற்கு விசாரணைக்காக அவர் வந்த போதரவர் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

நிதி மோசடி, பயங்கரவாத நிதி தடுப்பு மற்றும் சட்டவிரோத செயல் நிதி ஆகிய சட்டங்களின் கீழ் இவருக்கு எதிராக நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படலாம் என எம்.ஏ.சி.சி வட்டாரங்கள் கூறின.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலைக்கும் ஆகஸ்டுக்கும் இடையே மேம்பாட்டு நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குனர் ஒருவரை ஏமாற்றிய 19 மில்லியன் ரிங்கிட் பெற்றதாக ஞானராஜா மீது ஏற்கெனவே நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் நீதினறத்தில் விசாரணை கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker