Latestமலேசியா

நஜிப்பை விட அன்வாரே ஏற்கத் தக்க தலைவர்! -துன் மகாதீர்

கோலாலம்பூர், ஏப்.7- நஜிப்பை விட அன்வாரே ஏற்கத்தக்க தலைவர் என பிரதமர் துன் மகாதீர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன் எங்களுக்கிடையே மோதல்களும் போட்டிகளும் கடந்த காலத்தில் நிலவி இருந்தாலும் சூழ்நிலையை அறிந்து நாங்கள் ஒத்துழைக்க இணங்கினோம் என்றார் அவர்.

அத்தகைய ஒத்துழைப்பின் அடிப்படையில் தான், நாட்டுக்கு நஜிப்பினால் வரவிருந்த பேரழிவு தடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தாம் இல்லாத காலத்தில் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ வான் அஸிஸா அமைச்சரவையை நல்ல முறையில் வழி நடத்தினார். தாம் பிரதமர் பதவியில் இருந்து விலகினாலும் பிகேஆரை 20 ஆண்டு காலமாக வழி நடத்திய அன்வார் பக்காத்தானை சிதறாமல் பார்த்துக் கொள்வார் என மகாதீர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker