Latestமலேசியா

சபா-சரவாக்கியரும் பிரதமராக முடியும்! -மகாதீர்

கோத்தா கினபாலு, ஏப். 7 – எதிர்காலத்தில் சபா, சரவாக்கைச் சேர்ந்த தலைவர்கள் கூட நாட்டின் பிரதமராக வர முடியும் என பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம் என்றும் சபா, சரவாக் தலைவர்கள் தகுதியை உயர்த்திக் கொண்டால் நாட்டின் பிரதமராவதில் பிரச்சினை இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று, சபாவில் பிரிபூமி பெர்சத்து கட்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த விழாவில் உரையாற்றியபோது மகாதீர், பெர்சத்து சபாவின் ஆட்சியை எடுத்துக் கொள்ளாது, ஆட்சியில் இருக்கும் வாரிசான் சபாவுக்கு உறுதுணையாகவே இருக்கும் என உறுதி கூறினார்.

பெர்சத்துவில் இணையும் உறுப்பினர்கள் பணம், பதவிக்காக வரக்கூடாது. அதிகாரத் துஷ்பிரயோகம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சபாவில் அக்கட்சியில் சேர 120,076 பேர் விண்ணப்பித்து இருப்பதாகவும் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் அதில் இணைந்த பின்னர் அது 9 சட்டமன்ற உறுப்பினர்களையும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டு மாநிலத்தில் இரண்டாவது பெரிய கட்சியாகத் திகழும் என்றும் அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker