Latestமலேசியா

அமைச்சரின் மகன் மீது போதைப் பொருள் குற்றச்சாட்டு – முகைதீன்

கோலாலம்பூர், ஏப். 8 – போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அமைச்சர் ஒருவரின் மகன் மீது விரைவில் குற்றம் சுமத்தப்படும் என உள்துறை அமைச்சர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் மக்களவையில் தெரிவித்தார்.

அவரின் மருத்துவ பரிசோதனை அறிக்கையைப் பெற்ற சட்டத்துறை அலுவலகம், அகமட் சைஃபுல் இஸ்லாம் முகமட்டின் மீது வழக்கைத் தொடுக்கலாம் என அனுமதி அளித்துள்ளது.

லெங்கோங் தேசிய முன்னணி உறுப்பினர் டாக்டர் ஷம்சுல் அன்வார் நஸ்ராவில் கேள்விக்குப் பதிலளிக்கும்போது, ஜனவரி 5ஆம் தேதி ஜாலான்  அம்பாங் வட்டாரத்தில் போதைப் பொருள் போலீசார் நடத்திய சோதனையில் அமைச்சரின் புதல்வர் கைது செய்யப்பட்டு, மருத்துவப் பரிசோதனையில் மரிஜுவானா உட்கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக முகைதீன் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker