Latestஇந்தியா

இறந்து 25 வருடங்களுக்கு பின் யாழ்ப்பாணம் வந்தடைந்த சடலம்

கொழும்பு, ஏப்.8- இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் இறந்த ஈழத்தமிழர் ஒருவரது சடலம் சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டது. யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்த எம்.ஸ்டீபன் ஜோர்ஜ்  என்பவரது உடல் உறவினர்களால் கொண்டு வரப்பட்டது.

இவர் இத்தாலியில் தொழில் புரிந்து வந்த நிலையில், கடந்த 1994 ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி நோய்வாய்பட்டு, தனது 49 ஆவது வயதில் மரணமடைந்தார். ஆனாலும் அப்போது இலங்கையில் யுத்தம் தீவிரமாக இடம் பெற்றுக் கொண்டிருந்த காரணத்தினால் இறந்தவரின் உடலை இலங்கைக்கு கொண்டு வரமுடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் யுத்தம் எப்போது முடிவடையும் என்றும் தெரியாத காரணத்தினால்
இத்தாலியில் இருந்த அன்னாரது உறிவினர்கள் 25 ஆண்டுகளாக பிரேதத்தை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில், இலங்கையில் போர் நிறைவுக்கு வந்து பத்தாண்டுகளை தொட்ட நிலையிலும், உடலை கொண்டு வருவதில் சிக்கல்  காணப்பட்டன. மேலும் இறந்தவரது மனைவி இத்தாலிக்குச் சென்று கணவரின் உடலையும் பார்த்து விட்டு வந்ததாகவும் தெரிய வருகிறது.

தற்போது 25 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், இறந்தவரின் உடல் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி  சடங்குக்காக கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது.  

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker