Latestஇந்தியா

24 கோடி கொடுத்தும் ஜெயலலிதாவை நிராகரித்த வித்யாபாலன்!!

மும்பை, ஏப்.8-  24 கோடி சம்பளம் கொடுத்தும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு  படத்தில்  நடிக்க மறுத்தவர் வித்யாபாலன். தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்து வருகிறார் நடிகை வித்யாபாலன். பாலிவுட் நடிகையான இவர் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க முதல் வாய்ப்பு வித்யாபாலனுக்குத் தான் சென்றதாம். ஆனால் அவர் முடியாது என மறுத்துவிட்டார். அதற்கான காரணம், தான் அடுத்து இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்று வெப் சீரியலில் நடிக்கிறேன்.

அதனால் இதில் நடிக்க வாய்ப்பில்லை என்று அவர் காரணம் சொல்லி மறுப்பு கூறியிருக்கிறார். வித்யா பாலன் மறுத்த பிறகு தான், அந்த வாய்ப்பு நடிகை கங்கனாவிற்கு சென்றது. இதற்காக அவர் 24 கோடி ரூபாய் சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker