Latestமலேசியா

கேமரன் மலை விவசாயப் பண்ணை அழிப்பு- நிறுத்த வேண்டும்

கேமரன் மலை, ஏப், 9 –  கேமரன் மலை விவசாயிகள் அங்கு மாநில அரசு மேற்கொள்ளும் விவசாயப் பண்ணைகளை அழிக்கும் நடவடிக்கைளைத் தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, ஜாலான் ஈப்போ சுங்கை இச்சாட்டில் இருக்கும் 61 பண்ணைகளை  இரண்டாம் கட்ட அழிப்பு நடவடிக்கையில் பாதிக்கப்படும் என தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி, 11 பண்ணைகள் அழிக்கப்பட்டு எஞ்சியுள்ள 50 பண்ணைகள் இவ்வாரம் வியாழக்கிழமை, ஏப்ரல் 11இல் அழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க நாடாளுமன்றத்தில் மகஜரை சமர்ப்பித்திருந்தனர்.

இது சம்பந்தமாக தாம் ஆர்எஸ்என் ராயர், பாடாங் செராய் எம். கருப்பையா ஆகியோரோடு  விவசாய அமைச்சர் சலாஹுடின் அயோப்புடன் சந்திப்பு நடத்தப் போவதாக சார்லஸ் தெரிவித்தார்.  பெரா நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்புடனும் பேசப் போவதாகவும் சார்ல்ஸ் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker