Latestமலேசியா

சரவாக் பள்ளி மாணவர்கள் நீரின்றி அவதி – தீயணைப்புப் படை உதவி

மிரி, ஏப். 9 – வட சரவாக்கின் உட்புறத்தில் இருக்கும் தாத்தாவ் நங்கா முப்புட் தேசிய பள்ளியில் வறட்சியின் காரணமாக மாணவர்கள் குடிக்க நீர் இன்றி அவதிக்கு உள்ளாகினர்.

பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் 140 பெட்டி குடிநீரை அப்பள்ளிக்கு அனுப்பி உதவியது.

300 மாணவர்களைக் கொண்ட அப்பள்ளி தாத்தாவ் பட்டணத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் உட்புறத்தில் உள்ளது.

ஏப்ரல் 7ஆம் தேதி அதே வட்டாரத்தில் 200 மாணவர்களைக் கொண்ட தாயாய் தேசிய பள்ளியும் குடிநீரின்றி உதவி கோரியதால், 300 பெட்டி, பாட்டில்களில் அடைக்கப்பட்ட நீரை தீயணைப்பு இலாகா அனுப்பியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை தென் சரவாக்கில் ஸ்பாவோ மாவட்டத்தில் குடியிருக்கும் மக்கள் குடிநீர் இன்றி சிரமத்தை எதிர்நோக்கியதால் 22,000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீர் டேங்கர் லாரியின் மூலம் அங்கும் விநியோகிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker