Latestமலேசியா

நெல் வயலில் கொலையுண்ட ஆடவரின் சடலம் கண்டெடுப்பு !

கோத்தா பாரு, ஏப். 9 – கோத்தா பாரு, காடோக் எனும் இடத்திலுள்ள நெல் வயலில்   கொல்லப்பட்ட ஆடவரின் சடலம் ஒன்று  கண்டெடுக்கப்பட்டது.

நேற்று இரவு 8.30 மணியளவில் அச்சடலம் பொதுமக்களால் காணப்பட்டு,  போலீசுக்குத் தகவல் கொடுக்கப்பட்டதாகக் கிளந்தான் குற்றப் புலனாய்வு இலாகாவின் தலைவர் ஏசிபி வான் கைருடின் வான் இட்ரிஸ் தெரிவித்தார்.

கொல்லப்பட்ட ஆடவருக்கு 30 வயதிருக்கலாம் என்றும் அவர் அதே இடத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும் சடலத்தின் தலை, முகம் மற்றும் உடலின் பல பாகங்களிலும் காயங்கள் காணப்பட்டுள்ளன.

உடல், பிரேத பரிசோதனைக்காக ராஜா பெரம்புவான் ஸைனாப் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker