Latestமலேசியா

பங்களா விவகாரம், சிறு பிள்ளைத்தனமானது – தோக் மாட்!

சிரம்பான், ஏப். 9 –  தாம் விலையுயர்ந்த பங்களாவை ரகசியமாக வைத்திருப்பதாக பக்காத்தானின் குற்றச்சாட்டு சிறுபிள்ளைத் தனமானது என ரந்தாவ் தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் ஹசான் குறிப்பிட்டார்.

2008ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராக இருந்தபோது, முகமட் ஹசான்  1 கோடி ரிங்கிட் பெறுமான சொகுசு பங்களாவை லண்டனில் வாங்கியது எப்படி என பக்காத்தான் வேட்பாளர் டாக்டர் ஶ்ரீராம் திங்கட்கிழமை செய்தியாளர் கூட்டமொன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதனை  விசாரித்த ஊழல் தடுப்பு ஆணையம் அந்தப் பணத்தை லண்டனுக்கு அனுப்பி உதவிய நாணய மாற்று வியாபாரியின் கடையை  முடக்கிய வேளையில், முகமட் ஹசான் எந்தத் தண்டனையும் இன்றி தப்பித்தது எப்படி என்றும் டாக்டர் ஶ்ரீ ராம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அது பற்றித் தாம் பதில் சொல்லத் தயாராக இல்லை. எம்ஏசிசி அதனை விசாரித்து தம்மைக் குற்றமற்றவராக அறிவித்து விட்டதால் அது பற்றி தாம் கவலைப் படப் போவதில்லை என குறிப்பிட்டார்.

அரசியலில் பொறாமை உணர்ச்சியோடு பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி களங்கத்தை ஏற்படுத்துவது இயற்கை என்றும் முகமட் ஹசான் குறிப்பிட்டார்.

நேற்று செண்டாயான் வான்படைத் தளத்தில் தேர்தல் பரப்புரை ஒன்றில் பேசும்போது முகமட் ஹசான் அவ்வாறு கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker