Latestமலேசியா

மோட்டார் சைக்கிள் திருடர்கள் -அடுக்குமாடி வீடு, தொழிற்சாலைப் பகுதிகள் குறி

பாசிர் கூடாங், ஏப். 9 – பாசிர் கூடாங், சிறீ ஆலம் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து மோட்டார் சைக்கிள்கள் அதிகமாகத் திருடப்படுவதாகப் மாநில போலீஸ் தலைவர் இஸ்மாயில் டோலா தெரிவித்தார்.

குடியிருப்புகளில் வெளிப்புறங்களிலும் தொழிற்சாலைகளிலும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைக்க குறிப்பிட்ட இடம் இல்லாத காரணத்தினாலும்  அவை திருடப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மோட்டார் சைக்கிள்களைத் திருடுவோர் பெரும்பாலும் சொந்தத்திற்கு பயன்படுத்தவே திருடுவதாகவும், சில சமயங்களில் அவற்றின் உபரிப் பாகங்களைக் கழற்றி, தனித்தனியாக விற்கவும் செய்யப்படுகிறது.

எனவே, அம்மாதிரியான திருட்டைத் தடுக்க பொதுமக்கள் மோட்டார் சைக்கிள்களைப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்த வேண்டுமெனவும் முடிந்தால்,  இரு பூட்டுகளைப் பூட்ட வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker