Latestமலேசியா

1 மில்லியன் வேலை வாய்ப்புகள் சாத்தியமானதே – குலசேகரன்

கோலாலம்பூர், ஏப். 9 –  பக்காத்தான் வாக்களித்தபடி 5 ஆண்டுகளில் 1 மில்லியன் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது சாத்தியமானதே என மனிதவள அமைச்சர்  எம்.குலசேகரன் தெரிவித்தார்.

ஆட்சிக்கு வந்த 8 மாதங்களில் 130,000 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரபட்டுள்ளதாக ஆராவ் தேசிய முன்னணி உறுப்பினர் ஷாஹிடான் காசிமின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் மக்களவையில் இதனைத் தெரிவித்தார்.

அரசு பல்வேறு வேலை வாய்ப்புத் திட்டங்களை உருவாக்கித் தந்துள்ளதாகவும் அதில் வேலை காலியிடங்களை அறிவித்தல், வேலை வாய்ப்புச் சந்தைகளை நடத்துதல் போன்ற நடவடிக்கைகளும் அடங்கும்.

கடந்தாண்டு ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை மொத்தம் 168,677 வேலை தேடுவோர் இந்த நடவடிக்கைகள் மூலம் வேலைகளைப் பெற்றிருப்பதாக அமைச்சர் குலசேகரன் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker