Latestமலேசியா

எஸ்ஆர்சி நிதி முறைகேடு – 4 முறையீடுகளில் நஜிப் தோல்வி

புத்ரா ஜெயா, ஏப். 10 – கூட்டரசு நீதிமன்றத்தில்  நஜிப் ரசாக் செய்த 4 மேல் முறையீடுகளில் தோல்வி கண்டார்.

எஸ்ஆர்சி நிறுவனத்தின்  4.2 கோடி சம்பந்தப்பட்ட முறைகேட்டில் அவர் செய்த 3  முறையீடுகளோடு தமது வழக்கை ஊடகங்கள் விமர்சிக்கக் கூடாது என்ற கோரிக்கையிலும் அவருக்கு தோல்வி ஏற்பட்டது.

தலைமை நீதிபதி டான் ஶ்ரீ ரிச்சர்ட் மலாஞ்சு தலைமையில் கூடிய 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அந்த 4 முறையீடுகளையும் ஏகமனதாகத் தள்ளுபடி செய்தது.

இதன்படி, டத்தோ சுலைமான் அப்துல்லாவை அரசின் சார்பில் வாதாட நியமித்த நியமனக் கடிதத்தை நஜிப்பின் வழக்கறிஞர்களிடம் காட்டத் தேவையில்லை.

முறையீட்டை, தலைமை நீதிபதியோடு, மலாயா நீதிபதி டான் ஶ்ரீ ஸஹாரா இப்ராஹிம் சபா, சராவாக் தலைமை நீதிபதி டத்தோ ஶ்ரீ டேவிட் ஓங் டாக் வா, டான்சிறீ  ரம்லி அலி, டத்தோ தெங்கு மைமுன் துவான் மாட், டான் ஶ்ரீ  இட்ருஸ் ஹருண் மற்றும் டத்தோ நளினி பத்மநாதன் ஆகியோர் விசாரித்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker