Latestமலேசியா

ஒன்றாம் படிவ மாணவியுடன் பாலியல் வல்லுறவா? பாதுகாவலர் கைது!

ஜோர்ஜ் டவுன், ஏப். 10 –  ஒன்றாம் படிவ மாணவியை பாலியல் வன்கொடுமை புரிந்த பள்ளிப் பாதுகாவலர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பாலிக் பூலாவ் வட்டார இடைநிலைப் பள்ளியின் பாதுகாவலர் அறையில் அக்குற்றத்தைப் புரிந்ததன்  பேரில் நேற்று பிற்பகல் 2.20மணியளவில் 34 வயதான அந்நபர் கைது செய்யப்பட்டதாக தென்மேற்கு மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.ஏ.அன்பழகன் தெரிவித்தார். அவர் திருமணமானவர் எனவும் தெரிய வந்துள்ளது.

மாணவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட அவரின் தாயார், வற்புறுத்திக் கேட்டபோது, கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து அந்தப் பாதுகாவலருடன் நெருக்கமாக இருந்ததாகவும் மார்ச் மாதத்தில் அவரது அறையில் பாலுறவு வைத்துக் கொண்டதாகவும் அம்மாணவி ஒப்புக் கொண்டார்.

தாயாரின் புகாரை அடுத்து,  அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.  மருத்துவமனையில் அம்மாணவியைப் பரிசோதித்ததில், பாதுகாவலருடன் அவர் பாலியல் உறவு வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

கைதான பாதுகாவலர் குற்றவியல் சட்டம் பிரிவு 376இன் கீழ் விசாரிக்கப்படுவார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker