Latestசினிமா

கமல் உடனான நட்பை கெடுத்து வீடாதீர்கள்: ரஜினி

சென்னை, ஏப்.10-  எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி ஏற்கனவே கூறிவிட்டேன். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இந்த விஷயத்தை பெரிதுப்படுத்தி கமலுக்கும் எனக்கும் இடையேயான நட்பை கெடுத்துவிடாதீர்கள்.

நதிகளை இணைக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரி வருகிறேன். பா.ஜவின் தேர்தல் அறிக்கையை பார்த்தேன். நதிகள் இணைப்பிற்கு தனி ஆணையம் என்று சொல்லியிருக்கிறார்கள். நிச்சயம் வரவேற்கத்தக்கது. நதிகள் இணைப்பு பற்றி முன்பே வாஜ்பாயிடம் பேசியிருக்கிறேன். இந்த திட்டத்திற்கு பகீரத யோஜன என பெயர் வைக்கும்படியும் சொல்லியிருந்தேன்.

தேர்தலில் மக்கள் என்ன மாதிரியான தீர்ப்பு கொடுக்கப்போகிறார்கள் என தெரியவில்லை. ஒரு வேளை பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதல் வேளையாக நதிகள் இணைப்பை செய்ய வேண்டும். அப்படி செய்தால் நாட்டில் பாதி பிரச்சனை தீர்ந்துவிடும் குறிப்பாக குறிப்பாக வறுமை  இல்லாமல் போய்விடும் என்றார்.

நடிகர் கமல் தேர்தலில்  களம் காண்கிறார்.  இந்த தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்டதாகவும் அவரும் தருவதாகவும் சொன்னதாக கமல் கூறியிருந்தார். இந்நிலையில் இந்நேரத்தில் யாருக்கும் ஆதரவு இல்லை என ரஜினி மீணண்டும் தெளிவுப்படுத்தினார். இதனால் கமல் மட்டுமல்ல மற்ற கட்சியினரும் ஏமாற்றமாக உள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker