Latestமலேசியா

சூரிய வெப்ப மின்சார ஊழல்  -குற்றச்சாட்டை மறுத்தார் ரோஸ்மா

கோலாலம்பூர், ஏப். 10 – தம்மீது சுமத்தப்பட்ட சூரிய வெப்ப மின்சாரத் குத்தகை ஊழலின் இரண்டாவது குற்றச்சாட்டை மறுத்து டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் விசாரணை கோரினார்.

125 கோடி ரிங்கிட் மதிப்பிலான சரவாக்கின் உட்புற  369 பள்ளிகளுக்கு இத்திட்டத்திற்கான குத்தகையைப் பெற்றுத் தருவதற்கான கையூட்டாக 50 லட்சம் ரிங்கிட்டை ஜெபாக் ஹோல்டிங்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் சைடி அபாங் சம்சுடின் என்பவரிடமிருந்து அப்பணத்தை 2016 டிசம்பரில் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

2009ஆம் ஆண்டு எம்ஏசிசி சட்டம், பிரிவு 16(அ)(ஏ) இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டு சிறையும், ஊழல் பணத்தின் 5 மடங்கு அபராதமும் விதிக்கப்படும்.

10 லட்சம் ரிங்கிட் பிணையில் ரோஸ்மா விடுவிக்கப்பட்டார். வழக்கின் மறு வாசிப்பு மே 10இல் நடைபெறும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker