Latestமலேசியா

புதிய ஜோகூர் மந்திரி பெசார்- புக்கிட் கெப்போங் சாஹ்ருடின் நியமிக்கப்படலாம்

கோலாலம்பூர், ஏப். 10 – பிரிபூமியின் புக்கிட் கெப்போங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சாஹ்ருடின் ஜமால் ஜொகூர் மந்திரி பெசாராக வர வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்தோனேசியாவின் ஹசானுடின் பல்கலைக்கழக மருத்துவ பட்டாதாரியான அவர் நியாயமான தேர்வாகவும் வயது, கல்வியறிவு அரச குடும்பத்தோடு இருக்கும் உறவு போன்றவற்றினால் அவர் நியமிக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பொதுத்தெர்தலில் அவர் பாஸ் கட்சியின் முகமட் நூர் இக்பால் அப்துல் ரசாக்கை தோற்கடித்துள்ளார்.

ஜொகூர் சட்டமன்றத்தின் 56 தொகுதிகளில் பாக்காத்தானுக்கு 39 தொகுதிகளும் தேசிய முன்னணிக்கு 16ம் பாஸ் கட்சிக்கு ஓர்  இடமும் உள்ளது.

பக்காத்தான் உறுப்புக் கட்சிகளில், ஜசெகவுக்கு 14 தொகுதிகளும்  பெர்சத்துவுக்கு 11, அமானாவுக்கு 9ம் பிகேஆருக்கு 9 இடங்களும் உள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker