Latestமலேசியா

பெல்டா வாங்கிய ஈகல் ஹை பங்குகள்- நட்டமடைய வாய்ப்பில்லை- நஜிப்

சிரம்பான், ஏப். 10 – இந்தோனேசிய ஈகல் ஹை தோட்டத்துறை பங்குகளை நல்ல நோக்கத்துடன்தான் பெல்டா கொள்முதல் செய்ததாக டத்தோசிறீ நஜிப் ரசாக் குறிப்பிட்டுள்ளார்.

அது சம்பந்தமாக பெல்டா போலீசில் குற்றம் சாட்டியிருப்பதைக் சுட்டிக்காட்டிய அவர், அதில் பெல்டா நட்டமடைய வழியில்லை. ஏனெனில், அந்த நிறுவனம் அந்தப் பங்குகளை திரும்ப வாங்கிக் கொள்ளும். அதோடு   விற்கப்பட்ட விலையில் வட்டியாக 6 விழுக்காட்டுத் தொகையையும் பெல்டாவுக்குச் செலுத்த வேண்டுமென்ற ஷரத்து ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டதாக  நஜிப் குறிப்பிட்டார்.

அந்தப் பங்குகளை பெல்டா வாங்க நஜிப்பே நெருக்குதல் கொடுத்தார்.  அதன் 37 விழுக்காட்டுப் பங்குகளை வாங்க 50.5 கோடி டாலர் (207 கோடி ரிங்கிட்) செலவிடப்பட்டது. அதன் உண்மையான விலை 46.69 கோடி ரிங்கிட் என்றும் அந்த விலைக்கு 37 விழுக்காட்டுக்கு அதிகமாக   பெல்டாவிடம் விற்கப்பட்டதாக அதன் தலைமை இயக்குநர் டாக்டர் ஓஸ்மான் ஓமார், நஜிப்பின் மீது போலீஸ் புகாரை அளித்திருந்தார்.

மேலும், பங்கு கொள்முதல் செய்ய 480 கோடி ரிங்கிட் கடனை பெல்டா  பெற்றதாகவும் தற்போது அந்தப் பங்குகளின் விலை படுவீழ்ச்சி அடைந்ததாக ஓஸ்மான் தமது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker