Latestமலேசியா

வீட்டின் கூரையில் முதியவரின் அழுகிய சடலம்

பாரிட் புந்தார், ஏப். 10 – பாரிட் புந்தார் ஜாலான் பந்தாய் குவாலா குராவ் எனும் இடத்தில் சில நாட்களாகக் தூர் நாற்றம் வீசி வருவது ஏன் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத அந்தக் கம்பத்துவாசிகள், பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

எனினும், நேற்று வீடொன்றின் கூரையில் சடலம் ஒன்றின் ஒரு கை தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்ட அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

நேற்று காலை 10.30 மணியளவில் அந்த வீட்டின் கூரையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் அங்கிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த  சடலத்தின் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், அப்பகுதியில் வசிப்போராகத்தான் இருக்க வேண்டுமென கருதப்படுகிறது.

போலீசார் அச்சடலத்தைக் கூரையிலிருந்து இறக்கி,  பாரிட் புந்தார் மருத்துவமனைக்கு  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்னரே, மரணத்துக்கான காரணம் தெரியவரும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker