Latestஉலகம்

வீட்டில் பிரசவம் மேகன் எடுத்துள்ள முடிவு: அரசியார் விரும்புவாரா!

லண்டன், ஏப். 10- பிரிட்டன் இளவரசர் ஹர்ரியின் மனைவி மேகன் வீட்டிலேயே பிரசவத்தை வைத்துக் கொள்ளப் போவதாக அவருக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ள நிலையில் அதை அரசியார் விரும்புவாரா என்ற கேள்வி எழ வாய்ப்புள்ளது.

விண்ட்சர் இல்லத்திற்கு குடிபெயர்ந்து தங்கள் முதல் பிரவசத்தை அந்த வீட்டிலேயே வைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளனர். என்றாலும் 35 வயதான ஒரு மேகனுக்கு சுகபிரசவம் சாத்தியமா என்னும் முக்கிய கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால் மேகன் யோகா உட்பட பல பயீற்சிகள் மேற் கொள்வதால் பிரசவத்தில் சிக்கல் இருக்காவது என்று நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.அத்துடன் ஹர்ரியும் பிரசவ நேரத்தில் உடன் இருப்பார் என்பதால் அது மேகனுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று கருதப்படுகிறது்

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இளவரசர் வில்லியம் – கேத் தம்பதியர் குழந்தை பிறந்தவுடன் அதை தூக்கி மருத்துவமனை வாசலில் நின்று போஸ் கொடுப்பது போல் மேகனுக்கு விருப்பமில்லை. அதற்கு முக்கிய காரணம் அது நேரடி அரண்மனை ஏறும் வாரிசல்ல என்பது தான்.

அடுத்த கேள்வி இதை அரசியார் விரும்புவாரா என்பது.. ஒரு புறம் இருக்க அரசியாரே தாத்தா பாட்டி வீட்டில் தான பிறந்தார். அத்துடன் அவரது எல்லாக் குழந்தைகளும் பக்கிங்ஹாம் அரண்மனையில் தான் பிறந்தார்கள் எனும் போது தனது அரிச்சுவடுகளை பின் பற்றி மேகன் வீட்டில் பிரசவத்தை நிச்சயம் வரவேற்பார் எனவும் நம்பப் படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker