Latestமலேசியா

இளஞ்சிவப்பு நிற வைரம் – பணம் கொடுத்தது யார்? ரபிஸி கேள்வி

சிரம்பான், ஏப். 11 – இளஞ்சிவப்பு நிற வைரம் ரோஸ்மாவுக்கு சொந்தமானது இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது 1எம்டிபியின் திருடப்பட்ட பணத்திலிருந்துதான் வாங்கப்பட்டது என ரபிஸி ரம்லி குறிப்பிட்டார்.

அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் நஜிப், அந்த வைரமானது அரபு எமிரேட்சின் இளவரசர் ஷேய்க் மன்சோரின் சகோதரர் ஷெய்க் முகமட் பின் ஸாயெட் என்பவர் ரோஸ்மாவுக்கு பரிசாகக் கொடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, அந்த வைரத்திற்கான கட்டணத்தை கொடுத்தது யார் என ரபிஸி கேள்வி எழுப்பினார். அமெரிக்க நீதித்துறையின் (டிஓஜே) அறிக்கையின்படி, அந்த 27 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வைரமானது 1எம்டிபியின் திருடப்பட்ட பணத்திலிருந்து வாங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜோ லோவுக்குச் சொந்தமான 25 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான இக்குவானிமிட்டி சொகுசுக் கப்பல் அவரின் பெயரில் வாங்கப்பட்டது அல்ல, மாறாக அவருக்குத் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனம் ஒன்று அதன் பெயரில் வாங்கி அவருக்குக் கொடுத்ததாக நேற்று ரந்தாவில் தேர்தல் பரப்புரைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ரபிஸி குறிப்பிட்டார்.

இந்த வைரமும் அம்மாதிரியான முறையில்தான் வாங்கப் பட்டிருக்கும் சாத்தியம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker