Latestசினிமா

கமல்ஹாசனை எனக்கு பிடிக்காது – ஆனால் பிடிக்கும்:- சர்ச்சையை கிளப்பும் ராதாரவி

சென்னை, ஏப்.11- பொதுவாகவே எனக்கு கமல்ஹாசனை பிடிக்காது. ஆனால் ஒரு விஷயத்தில் அவரை எனக்கு பிடிக்கும் எனவும் ராதாரவி பேசியுள்ளார். எப்பொழுதும் சர்ச்சையான கருத்தை கூறி வரும் ராதாரவி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாராவை பற்றி அவதூறாக பேசி சிக்கலில் சிக்கினார்.  அதன் பின் தான் பேசியது  தவறாக இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் என்றும் கூறினார்.

இந்நிலையில் படவிழா ஒன்றில் பங்கேற்ற ராதாரவி பேசுகையில், கதாநாயகன் என்பவர் எப்பொழுதும் கருப்பு கண்ணாடி போட்டு நடிக்காதீர்கள். எப்போதாவது போடலாம். ஆனால் எப்பொழுதும் போட்டு நடிப்பவர்களுக்கு நடிப்பு சுத்தமாக தெரியாது என்று தான் அர்த்தம்.

கமலை பாருங்கள் அவரை எனக்கு பிடிக்காது தான். ஆனால் அவர் படத்தில் எந்தச் சூழலில்  கறுப்பு கண்ணாடி போட வேண்டுமோ அங்கு மட்டும் தான் கண்ணாடி போடுவார். அதனால் தான் அவர் சினிமாவில் இன்றும் முதலிடத்தில் உள்ளார் என்று பேசியுள்ளார். 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker