Latestமலேசியா

ராகா முன்னாள் செய்தி வாசிப்பாளர் விக்னேஸ்வரன் மூர்த்தி காலமானார்!

கோலாலம்பூர், ஏப்.11 – ராகா வானொலி செய்திப் பிரிவில் முன்னாள் செய்தியாளராக பணியாற்றிய விக்னேஸ்வரன் மூர்த்தி (வயது 27) நேற்று காலை மரணம் அடைந்தார்.

நுரையீரல் தொற்று நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்ப உறுப்பினர் உறுதிப்படுத்தினர்.

கெடா மாநிலத்தை பிறப்பிடமாகக் கொண்ட விக்னேஸ்வரன் தமிழ் பற்று உடையவராவார். குறிப்பாக புதுக் கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். அவரின் தீடீர் மறைவு அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி ஊடகவியலாளர்களையும் வெகுவாக பாதித்துள்ளது.

விக்னேஸ்வரனின் இறுதிச் சடங்கு அவரது பிறப்பிடமான கெடாவில் நடைபெறும் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker