Latestமலேசியா

பெல்டாவின் மீது துல்லியமான விசாரணை- முகைதீன்

பெட்டாலிங் ஜெயா, ஏப். 12 – பெல்டா ஊழல்களில் போலீசார் எந்த பாகுபாடின்றி விசாரணை செய்வர் என உள்துறை அமைச்சர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.

பெல்டாவின் பல முறைகேடான முதலீடுகளில் ஈடுபட்டதால் அது பெரும் நட்டத்தை அடைந்துள்ளதாகவும் 120,000 குடியேற்ற வாசிகளின் நலனுக்க்காக அரசு 600 கோடியை உதவியாகத் தர உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தோனேசிய ஈகல் ஹாய் எனும் நிறுவனப் பங்குகள் எதிர்கால நலனை முன்னிட்டே வாங்கப்பட்டதாக நஜிப் ரசாக் கூறியிருப்பதைச் சாடியிருக்கும் அவர், 250 கோடி ரிங்கிட்டுக்கு 300 விழுக்காடு அதிக விலையில் வாங்கபட்ட அதன் பங்குகளின் இப்போதைய மதிப்பு வெறும் 50 கோடி ரிங்கிட் மட்டுமே என்றும் அதன் மூலம் பெல்டா 200 கோடி ரிங்கிட் நட்டமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker