Latestமலேசியா

பேராக் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு குறைந்த விலையில் நிலம் விற்கப்பட்டதா? அரப்பாட் விளக்கம் கோருகிறார்

ஈப்போ, ஏப் 12 – கடந்த 2009 ஆம் ஆண்டில் பேராக் மாநிலத்தில் கட்சித் தாவிய முன்னாள் பேராக் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜமாலுடின் முகமட் ராட்சிக்கு குறைந்த விலையில் நிலம் விற்கப்பட்டது குறித்து உலுகிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராப்பாட் கேள்வி எழுப்பியுள்ளார் .

இந்த விவகாரம் பெரும் சர்சையாக உருவாகியுள்ளதால் இதற்கு சம்பந்தபட்டவர்கள் 48 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் இல்லையேல் ஊழல் தடுப்பு நிறுவனத்திடம் புகார் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேராக்கில் ‘ புரட்டோன் சிட்டி ‘ எனும் இடத்தில் 257.73 ஏக்கர் நிலத்தை மாநில நில மேம்பாட்டு கழகத்திடமிருந்து கடந்த 2015 இல் அதாவது தேசிய முன்னணி ஆட்சியின் போது டத்தோ ஜமாலுடின் அதனை வாங்கியுள்ளார்.

ஒரு ஏக்கர் 6 ஆயிரம் வெள்ளிக்கு வாங்கியுள்ள நிலையில், அது அன்றைய நடைமுறை விலைக்கு மிக மிக குறைவாகவே இருந்துள்ளது.

அதற்கு அன்றைய மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதிர் அல்லது மாநில நில மேம்பாட்டு கழக நிறுவனத்தின் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .

இன்று மாநில ஜசெக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நம்பிக்கை கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker