Latestமலேசியா

வங்கிக் கணக்கு முடக்கம் செல்லாது!முன்னாள் உளவுத் தலைவர் எம்ஏசிசி மீது வழக்கு

கோலாலம்பூர், ஏப். 12 – தனது வங்கிக் கணக்குகளை தடை செய்தது சட்டவிரோதமானது என முன்னாள் உளவுத் துறைத் தலைமை இயக்குநர் டத்தோ ஹசானா அப்துல் ஹமிட் ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசியின் மீது வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

நிதி முறைகேட்டு வழக்கில் தம்மைத் தடுத்து வைக்கப்பட்டபோது வங்கிக் கணக்கை முடக்கியது தமக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் அது பற்றி வங்கிற்குச் சென்று பணம் எடுக்க முனைந்தபோது முடியாத பின்னரே தமக்கு அது பற்றி தெரியவந்தது.

இது சம்பந்தமாகப் பல முறை எம்ஏசிசிக்கு கடிதல் எழுதியிருந்தாலும், சரியான பதில் இல்லை.

தமது ஓய்வூதியம் மட்டுமே வருமானம் என்பதால் கையில் பணம் இல்லாமல் சிரமப்படுவதாக அவர் தமது வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

14-வது பொதுத் தேர்தல் காலகட்டத்தில் வெளி நாட்டுப் பணத்தை உட்படுத்திய நிதி முறைக்கேடு தொடர்பில் ஊழல் தடுப்பு ஆணையம் அவரை கைது செய்ததோடு வங்கிக் கணக்கை முடக்கியது.

கடந்த அக்டோபர் 25ஆம் தேதி,  ஹசானாவின் மீது 12.1 மில்லியன் அமெரிக்கா டாலர் (50.4 மில்லியன் ரிங்கிட்)  நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker