Latestஉலகம்

விண்வெளியில் இருப்பது மனித உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும்! உறுதிப்படுத்தும் இரட்டைச் சகோதரர்கள்

கோலாலம்பூர், ஏப். 12 –  வான்வெளியில் நீண்ட காலம் இருந்தால் மனிதர்களின் உடல் மற்றும் உள ரீதியில் பெரும் மாறுதலை அடையும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

ஸ்கோட் கெல்லி அமெரிக்க வான்வெளி திட்டத்தில் இணைந்து 340 நாள்கள் வான்வெளியில் இருந்துள்ளார். அவர் பூமிக்குத் திரும்பியப் பிறகு அவரின் இரட்டை சகோதரரான முன்னாள் விண்வெளி வீரத் மார்க் கெல்லியின் உடல்நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டுள்ளது. அக்காலக் கட்டத்தில் அவரின் உடல்நிலை, மனை நிலை முதலியவற்றில் பல்வேறு மாறுதல்கள்  நிகழ்ந்துள்ளதாகக்  கண்டறியப்பட்டுள்ளது.

அவற்றில் சில, சில காலத்திற்கு படிப்படியாக மாற்றம் கண்ட வேளையில் சில நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.


அவரின் இரத்த தமணி தடித்து, உடல் எடை குறைந்து, சிந்திக்கும் திறன் குறைந்து, மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு, அவரின் க்ரோமொசத்திலும் மாற்றம் ஏற்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் எதிர்காலத்தில் வான் வெளிக்கு அனுப்பப்படும் மனிதர்களுக்கு முன்னெச்சரிக்கையாக எம்மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை தெளிவு படுத்தும் என நம்பப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker